மேலும் செய்திகள்
போக்சோவில் சிறுவன் கைது
23-Feb-2025
திண்டிவனம்; திண்டிவனம் அருகே 16 வயது சிறுமியை கடத்தி, திருமணம் செய்த 22 வயது வாலிபர் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது நர்சிங் மாணவி. இவர், சில தினங்களுக்கு முன் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.அதில், ஆந்திர மாநிலம், சித்துாரை சேர்ந்த கார்த்திக்குமார், 22; என்பவர் சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமாகியதை தொடர்ந்து, அவரை கடத்திச் சென்று ஆந்திராவில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.போலீசார் ஆந்திராவிற்கு விரைந்து சென்று நேற்று முன்தினம் மாலை, கார்த்திக்குமார் மற்றும் சிறுமியை மீட்டு திண்டிவனம் அழைத்து வந்தனர்.சிறுமியை திருமணம் செய்ததால் கார்த்திக்குமார் மீது திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
23-Feb-2025