மேலும் செய்திகள்
நாயை கொன்ற பரிதாபம் போலீஸ் விசாரணை
23-Feb-2025
கோட்டக்குப்பம்; சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.சென்னை மீஞ்சூரை சேர்ந்தவர் பாபு மகன் ராஜி, 25; வானூர் அடுத்த ஒரு கிராமத்தில் கூலி வேலை செய்தபோது, அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை, காதலித்துள்ளார். கடந்த மாதம் சிறுமியை அழைத்து சென்று கோவிலில் திருமணம் செய்து கொண்டு தலைமறைவானார். இதுகுறித்து வானூர் சமூக நல அலுவலர் உலகரட்சகி அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, ராஜி மீது போக்சோ வழக்கு பதிந்து அவரை தேடி வந்தனர்.இந்நிலையில், சென்னையில் இருந்த ராஜியை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும், சிறுமியை மீட்டு விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தில் ஒப்படைத்தனர்.
23-Feb-2025