செஞ்சி சாரதா மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி
செஞ்சி: செஞ்சி சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பத்தாம் வகுப்பு தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுசாதனை படைத்துள்ளது. செஞ்சி சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 192 பேரும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு நுாறு சதவீத தேர்ச்சியை பெற்று தந்துள்ளனர். மாணவி மேகவர்ஷினி 500க்கு 495 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவி பிரியதர்ஷினி 493 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவிகள் திவ்யாஸ்ரீ, காவியா ஆகியோர் 491 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பிடித்தனர். அறிவியல் பாடத்தில் 11 மாணவர்களும், சமூக அறிவியிலில் 10 மாணவர்கள், ஆங்கிலத்தில் 1 மாணவனும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றனர். தமிழில் 3 மாணவர்களும், ஆங்கிலத்தில் 20 மாணவர்களும், கணிதத்தில் 21 மாணவர்களும், அறிவியலில் 6 மாணவர்களும், சமூக அறிவியல் பாடத்தில் 14 மாணவர்களும் 99 மதிப்பெண் பெற்றுள்ளனர். 490 மதிப்பெண்ணுக்கு மேல் 4 மாணவர்களும், 450 க்கு மேல் 75 மாணவர்களும், 400க்கு மேல் 64 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர். சராசரி மதிப்பெண் விகிதம் 445. முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை பள்ளி தாளாளர் கலைச்செல்வன் பரிசு வழங்கி பாராட்டினார். பள்ளி முதல்வர் சிவசங்கரி, நிர்வாக அலுவலர் அருள், பிரைமரி பள்ளி முதல்வர் உஷா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் உடன் இருந்தனர்.