100 வயது மூதாட்டி சாவு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கடுங்குளிரில் அவதிப்பட்ட 100 வயது மூதாட்டி இறந்தார். மேலமேடு கிராமத்தை சேர்ந்தவர் பாலுசாமி மனைவி பார்வதி, 100; இவர், தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட குளிரில், உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று மாலை இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.