அங்காளம்மள் கோவிலில் 1000 போலீசார் பாதுகாப்பு
விழுப்புரம்: மேல்மலையனுாரில், 1000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை யொட்டி, இன்று ஊஞ்சல் உற்சவம் நடக்கவுள்ளது. ஆடி திருவிழாவை யொட்டி, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், பெருமளவில் தங்களின் குடும்பங்களோடு கலந்து கொள்ள உள்ளனர். இதையொட்டி எஸ்.பி., சரவணன் உத்தரவின் பேரில், இரு ஏ.டி.எஸ்.பி.,க்கள், 5 டி.எஸ்.பி.,க்கள், 19 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை, அதிரடிப்படை, பட்டாலியன் உட்பட மொத்தம், 1000 போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.