உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆதிவாலீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

ஆதிவாலீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

விழுப்புரம்: விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது.அதனையொட்டி, கோவிலில் உள்ள மூலவருக்கு நேற்று மாலை 4:00 மணிக்கு மேல் 1008 சங்குகளால் சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, ஆதிவாலீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 5:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகி வெங்கடேசன் தலைமையில் அப்பகுதி மக்கள் செய்தனர்.மயிலம்: ரெட்டணை ராஜ ராஜேஸ்வரி உடனுறை ராஜராஜேஸ்வரர் கோவிலில் நேற்று காலை 9:30 மணிக்கு 108 சங்க அபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து மூலவருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட நறுமணப்பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் நேற்று காலை 10:00 மணிக்கு ஞானாம்பிகை சமேத ராமநாதீஸ்வர்ர சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜையும், 1008 சங்காபிேஷகமும் நடந்தது.மாலை கலசம் புறப்பாடும், ஞானாம்பிகை அம்மனுக்கு அபிஷேகமும் நடந் தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை