உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப தேர்வு மாவட்டத்தில் 1,286 பேர் பங்கேற்பு

டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப தேர்வு மாவட்டத்தில் 1,286 பேர் பங்கேற்பு

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப தேர்வில், ஆயிரத்து 286 பேர் பங்கேற்றனர். விழுப்புரம் மாவட்டத்தில், டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான (டிப்ளமோ, ஐ.டி.ஐ., லெவல்) தேர்வு நேற்று துவங்கியது. நேற்று காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரையும், பிற்பகல் 2:30 மணி முதல் 5:30 மணி வரையும் தேர்வு நடைபெற்றது. இதில், தமிழ் தகுதித் தேர்வு, பொது அறிவு மற்றும் திறனறிவும், மனக்கணக்கு நுண்ணறிவுக்கான தேர்வும் நடைபெற்றது.நேற்று நடைபெற்ற முற்பகல் தேர்வுக்கு விண்ணப்பித்த ஆயிரத்து 224 பேரில் 723 பேர் பங்கேற்றனர். இதில், 501 பேர் தேர்வு எழுதவில்லை. பிற்பகல் தேர்வுக்கு விண்ணப்பித்த 563 பேரில், 360 பேர் பங்கேற்றனர். இதில், 203 பேர் தேர்வு எழுதவில்லை. மொத்தம் 704 பேர் தேர்வில் 'ஆப்சென்ட்' ஆகினர். இதனையடுத்து நாளை (11ம் தேதி) முதல் வரும் 16ம் தேதி வரை கணினி வழித்தேர்வு நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி