உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 2 வயது குழந்தை கார் மோதி பலி

2 வயது குழந்தை கார் மோதி பலி

திண்டிவனம் : திண்டிவனம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் 2 வயது குழந்தை இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த புறங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 25; இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த தனது உறவினரான, சுரேஷ் என்பவரின் 2 வயது குழந்தை தர்ஷனை, நேற்று மாலை 4:00 மணியளவில் பைக்கில் திண்டிவனத்திற்கு அழைத்துச் சென்றார்.ஒலக்கூரில் தேசிய நெடுஞ் சாலையை கடக்க முயன்றபோது, திண்டிவனத்திலிருந்து சென்னை சென்ற கார், பைக் மீது மோதியது.இதில், படுகாயமடைந்த குழந்தை தர்ஷன் சம்பவ இடத்திலேயே இறந்தான். காயமடைந்த மணிகண்டன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ