வீடு புகுந்து திருட்டு விழுப்புரத்தில் 2 பேர் கைது
விழுப்புரம்: வீடு புகுந்து திருடிய சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம், சாலாமேடு, ஸ்ரீரங்கா நகர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் பொன்னுமணி, 29; இவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து பொன்னுசாமி அளித்த புகாரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அப்போது, சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்ததில், திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த ரவி மகன் கிஷோர்,22; விழுப்புரம் சாலாமேடில் வசித்து வரும் லாசர் மகன் கிருஷ்டோபர், 38; ஆகியோர் சேர்ந்து, திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.