கஞ்சா விற்ற 2 பேர் கைது
விழுப்புரம் : கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா மற்றும் போலீசார் ஆசாகுளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாலாமேடு என்.ஜி.ஓ., காலனி முத்துமாயன், 48; ஆசாகுளம் ராஜா, 40; ஆகியோர் கஞ்சா விற்றது தெரியவந்தது. உடன், அவர்கள் மீது வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள சென்னை கோயம்பேடு கார்த்திக் போலீசார் தேடி வருகின்றனர்.