உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது

மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது

திண்டிவனம் : திண்டிவனம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் பிரம்மதேசம் கூட்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் புதுச்சேரி மதுபானம் கடத்தி வந்த பிரம்மதேசம் தோப்பு தெருவை சேர்ந்த விக்னேஷ், 24; கைது செய்து, 64 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மயிலம் அருகே உள்ள பெரும்பாக்கம் சோதனைச்சாவடியில் நடந்த சோதனையில், 12 மதுபாட்டில் கடத்தி வந்த பெரும்பாக்கம் மாரியம்மன் கோவிலை சேர்ந்த குமரன், 38;என்பவரை போலீசார் கைது செய்தனர்.இருவரிடம் இருந்து 76 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ