மேலும் செய்திகள்
பைக்கில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
25-Apr-2025
விழுப்புரம்,:விழுப்புரத்தில் காரில் கடத்தி வந்த 180 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.விழுப்புரம் பழைய பூங்கா அருகே டவுன் இன்ஸ்பெக்டர் சித்ரா தலை மையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்த முயன்றபோது, நிறுத் தாமல் இன்ஸ்பெக்டர் மீது மோதுவது போல் வந்தனர்.உடன், போலீசார் காரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 180 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரிந்தது.விசாரணையில் காரில் வந்தவர்கள், திருவெண் ணைநல்லுார் அடுத்த பைத்தாம்பாடியைச் சேர்ந்த சதீஷ், 34; விக்கிரவாண்டி வி.சாலை சத்யநாராயணன், 36; என்பது தெரியவந்தது.உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, மாருதி சுசுகி கார் மற்றும் குட்காவை பறிமுதல் செய்தனர்.
25-Apr-2025