உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கெடார் சப் இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் மற்றும் போலீசார் அசோகபுரியில் குட்கா விற்பனை குறித்து கடைகளில் சோதனை செய்தனர். அப்போது முருகையன், 45; திருவதி குன்னம் பிரபு, 50; ஆகியோரது கடையில் சோதனை செய்ததில் குட்கா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.உடன், அவர்களிடமிருந்து 350 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ