உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயிலம் அருகே இரு வேறு விபத்துகளில் 2 பேர் பலி

மயிலம் அருகே இரு வேறு விபத்துகளில் 2 பேர் பலி

மயிலம் : மயிலம் அருகே நடந்த இரு வேறு விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர்.விழுப்புரம் கே.கே.ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜாபர் அலி மகன் அப்துல்லா, 22; இவர், நேற்று விழுப்புரத்தில் இருந்து திண்டிவனத்திற்கு பைக்கில் சென்றார். காலை 10:45 மணியளவில் கூட்டேரிப்பட்டு மேம்பாலம் அருகே சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மற்றொரு விபத்து

விழுப்புரம் ராஜிவ் காந்தி நகர், மருதுார் பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் குகன், 23; சென்னை மீனம்பாக்கத்தில் தனியார் கம்பெனி ஊழியர். நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து பைக்கில் வீட்டிற்கு வந்தார்.கேணிப்பட்டு அருகே இரவு 10:00 மணிக்கு வந்தபோது, பின்னால் வந்த இன்னோவா கார் மோதி படுகாயம் அடைந்தார். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார்.இரு விபத்துகள் குறித்தும் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.பெரம்பலுார், அக். 13- அரியலுார் மாவட்டம், சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய். இவர் மதுரையில் 45வது பட்டாலியன் இந்திய - திபெத்திய எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் அவரின் சொந்த ஊரான சிந்தாமணி கிராமத்துக்கு நல்லடக்கம் செய்வதற்காக நேற்று கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்திய - திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், விஜயின் உடலுக்கு தேசிய கொடியை அணிவித்து மரியாதை செய்தனர். இறுதி ஊர்வலம் நடைபெற்றதை தொடர்ந்து, சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு எட்டு குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ