மேலும் செய்திகள்
குட்கா விற்றவர் கைது
28-Sep-2024
ஆன்லைன் லாட்டரி: வாலிபர் கைது
02-Oct-2024
திண்டிவனம் : திண்டிவனத்தில் குட்கா பொருட்கள் வைத்திருந்த லாரி டிரைவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் - சென்னை சாலையில் ஆர்யாஸ் ஓட்டல் எதிரே, டவுன் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்கு வந்த லாரியிலிருந்து கொடுத்த பார்சலை ஒருவர் வாங்கியதை பார்த்து பார்சலை சோதனை செய்தார். அதில் 49 குட்கா பாக்கெட் இருந்தது தெரியவந்தது.இது தொடர்பாக திண்டிவனம், சஞ்சீவிராயன்பேட்டையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் பிரகாஷ், 28; அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான மணலிங்கம் மகன் பிரகாஷ், 31; ஆகிய இருவரையும் கைது செய்தார்.
28-Sep-2024
02-Oct-2024