மேலும் செய்திகள்
கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது
31-Oct-2024
வீடு புகுந்து நகை திருட்டு; போலீஸ் விசாரணை
29-Oct-2024
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் கடைவீதியில் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அணைக்கட்டு சாலை பஸ் நிறுத்தத்தில் நேற்று மாலை பைக்கில் கத்தியுடன் வந்த 3 வாலிபர்கள், அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களை அச்சுறுத்தினர். பொதுமக்கள் அந்த வாலிபர்களை பிடிக்க முயன்ற போது ஒருவர் தப்பியோடினார். இருவரை பிடித்து தர்மடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீஸ் விசாரணையில், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தென்மங்கலம் சங்கர் மகன் முருகன், 20; ஜெயபாலன் மகன் நந்தகுமார், 20; என தெரியவந்தது.உடன், அவர்கள் மீது வழக்குப் பதிந்து, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய சுபாஷ் மகன் அரவிந்த், 21; என்பவரை தேடி வருகின்றனர்.
31-Oct-2024
29-Oct-2024