புகாரை வாங்க மறுத்த 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
விழுப்புரம் : புகாரை வாங்காமல் அலட்சியப்படுத்திய இரு போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.வானுார் அடுத்த திருவக்கரை கல்குவாரியில், கடந்த 23ம் தேதி தலை, கை, கால்கள் இல்லாத உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சரவணப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜதுரை, 32; என்பதும், அவரை கொலை செய்ததாக, விழுப்புரம் அடுத்த கொத்தனுார் மோகன்ராஜ், கார்த்திக், சிவா, உதயா, திண்டிவனம் அபிலாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இந்த கொலை சம்பவத்திற்கு முன், ராஜதுரையை காணவில்லை அவரது குடும்பத்தினர், திருவெண்ணெய்நல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க சென்றனர். அப்போது, பணியில் இருந்த ஏட்டு ராஜ்குமார், போலீஸ்காரர் சபரி ஆகியோர், சரியாக விசாரிக்காமல், புகாரை வாங்காமல் அலட்சியமாக, திருப்பி அனுப்பியது தெரிய வந்தது. அதனையொட்டி, புகாரை வாங்க மறுத்த ஏட்டு ராஜ்குமார், போலீஸ்காரர் சபரி ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்.பி., தீபக்சிவாச் உத்தரவிட்டார்.