உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயிலில் 20 கிலோ குட்கா கடத்தல்

ரயிலில் 20 கிலோ குட்கா கடத்தல்

விழுப்புரம்: எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 20 கிலோ குட்கா பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் ரயில் நிலையம் 5வது பிளாட்பாரத்தில் நேற்று ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் முத்துசெல்வம், போலீசார் கிருஷ்ணராஜ், திவாகர் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புவனேஸ்வர் - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த மூட்டையை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில், அரசால் தடை செய்த 20 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரிந்தது.போலீசார் வழக்குப் பதிந்து ரயிலில் குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை