| ADDED : அக் 23, 2025 06:50 AM
மயிலம்: மயிலம் அருகே சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் கவிழ்ந்ததில் 21 பயணிகள் படுகாயம் அடைந்தனர். பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி வழியாக அரசு பஸ் (டி.என் 55 -என் 1077), 53 பயணிகளுடன் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது. பஸ்சை அறந்தாங்கியை சேர்ந்த ராஜபாண்டி, 53; ஓட்டி வந்தார். அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன்,45; கண்டக்டராக பணியில் இருந்தார். மயிலம் அடுத்த ஜக்காம்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 3:30 மணியளவில், பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில், பஸ் பயணிகள் பட்டுக்கோட்டையை சேர்ந்த லோகமணி, 22; அறிவுக்கரசு, 36; உட்பட 21 பேர் காயமடைந்தனர். அவர்கள், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். படுகாயமடைந்த மூவர், மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதித்தது. மயிலம் போலீசார் போக்குவரத்தை சரி செய்து, விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.