மேலும் செய்திகள்
ஓய்வூதியர் செயற்குழு கூட்டம்
25-Oct-2024
ஓய்வூதியர் சங்க அமைப்பு தினம்
22-Oct-2024
விழுப்புரம் : தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் முன்னேற்ற சங்கத்தின் 28வது ஆண்டு விழா, விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்ட தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சின்னையா வரவேற்றார். செயலாளர் மணி, ஆண்டறிக்கை வாசித்தார். மாநில தலைவர் சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் வானசுந்தரம், மாநில துணை பொதுச்செயலாளர் பாண்டியன் ஆகியோர், மூத்தகுடிமக்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினர்.இக்கூட்டத்தில், தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மின்வாரிய பணியாளர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கான சலுகைகளை வழங்க தேவையில்லை எனவும், நிறுவனங்களின் நிதி நிலைக்கேற்ப வழங்க வேண்டும் என்கிற அரசு உத்தரவை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் அமலோற்பவநாதன், சங்கரன், பன்னீர்செல்வம், வாசுதேவன், பஞ்சமூர்த்தி, மயிலாசலம் உட்பட பலர் பங்கேற்றனர். கோட்ட துணைச்செயலாளர் மணி நன்றி கூறினார்.
25-Oct-2024
22-Oct-2024