உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாஜி அரசு ஊழியரை தாக்கிய 3 பேருக்கு வலை

மாஜி அரசு ஊழியரை தாக்கிய 3 பேருக்கு வலை

விழுப்புரம்: மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதை ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ், 76; ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு சிலர் மது அருந்தினர். அதனை தங்கராஜ் கண்டித்தார். அதில் ஏற்பட்ட தகராறில், அவர்கள் தங்கராஜை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, விழுப்புரத்தை சேர்ந்த சதீஷ்.26; உள்ளிட்ட மூவரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ