உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மூதாட்டியிடம் செயின் பறிப்பு மரக்காணத்தில் 3 பேர் கைது

மூதாட்டியிடம் செயின் பறிப்பு மரக்காணத்தில் 3 பேர் கைது

மரக்காணம் : மரக்காணம் அடுத்த ஆலத்துாரில் மூதாட்டியிடம் செயின் பறித்த மூவரை போலீசார் கைது செய்தனர்.மரக்காணம் அருகே உள்ள ஆலத்துார் கிராமத்தை சேர்ந்த வீரராகவன் மனைவி கஸ்துாரி, 70; இவர் நேற்று முன்தினம் மதியம் 2.00 மணிக்கு ஆலத்துார் சாய்பாபா கோவில் அருகே சாலையோரம் நின்றிருந்தார். அப்பொதுழுது பைக்கில் வந்த மூன்று பேர்கள் கஸ்துாரி கழுத்தில் இருந்த இரண்டு சவரன் தங்க செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தனர்.மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அங்கிருந்த சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்ததில், செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேட்டை சேர்ந்த உதய சங்கர் மகன் தமிழ்இனியன், 18; மாரி மகன் தமிழ்செல்வன், 21; காஞ்சிபுரம் மாவட்டம், திருவள்ளூவர் பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் டில்லி, 30; ஆகிய மூவரும் செயின் பறிப்பில் ஈடுப்பட்டு தெரியவந்தது.மூவரையும் போலீசார் கைது செய்து, 2 சவரன் செயின் மற்றும் செயின் பறிப்புக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தன. ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு பவுன் தங்க சங்கிலியை பரிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ