உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காரில் கஞ்சா கடத்தல் மயிலத்தில் 3 பேர் கைது

காரில் கஞ்சா கடத்தல் மயிலத்தில் 3 பேர் கைது

மயிலம்: மயிலம் அருகே காரில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மயிலம் அடுத்த சின்னநெற்குணம் கிராமத்தில் மயிலம் இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை மார்க்கத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த ரெனால்ட் காரை நிறுத்தி சோதனை செய்ததில், 2 கிலோ 800 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காரில் வந்த மதுரை வடக்கு, பரசுராமன்பட்டி, கம்பன் நகர் மதன்ராஜ், 38; கோரிப்பாளையம் விஜயகுமார், 36; சென்னை, எண்ணுார், அன்னை சிவகாமி நகர் விக்ரம், 27; ஆகிய 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை