மேலும் செய்திகள்
அரிவாளுடன் பிறந்த நாள் கொண்டாடிய 3 பேர் கைது
04-Nov-2024
விழுப்புரம்; விழுப்புரத்தில் பைக்கில் வந்த சகோதரர்களை தாக்கிய சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் பெரியகாலனி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன்கள் புனிதஸ்ரீராம், 28; கதிரவன், 19; அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் 17 வயது சிறுவன் மற்றும் அவரது நண்பர்கள் ஸ்ரீநாத் மகன் விஷால் (எ) விமலநாதன், 18; மாரிமுத்து மகன் பூவரசன், 28; இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் அரசு மருத்துவமனை அருகே பைக்கில் வந்த புனிதஸ்ரீராம், கதிரவன் ஆகியோரை நிறுத்தி, நாங்களும் பைக்கில் வருகிறோம் என கூறியுள்ளனர்.அதற்கு, ஒரே பைக்கில் எப்படி செல்ல முடியும் என, கதிரவன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சிறுவன் உட்பட 3 பேரும் சேர்ந்து கதிரவன், புனிதஸ்ரீராம் ஆகியோரை தாக்கி விட்டு தப்பியோடினர். இதில் காயமடைந்த சகோதரர்கள், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.கதிரவன் அளித்த புகா ரின் பேரில், தாக்கிய விஷால், பூவரசன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர்.
04-Nov-2024