உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்; மயிலம் அருகே 6 பேர் காயம்

3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்; மயிலம் அருகே 6 பேர் காயம்

மயிலம்; மயிலம் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் கார் டிரைவர் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.மதுரையில் இருந்து நேற்று முன்தினம் இரவு, 36 பயணிகளுடன் ஆம்னி பஸ் சென்னை நோக்கி புறப்பட்டது. பஸ்சை, கமுதியை சேர்ந்த டிரைவர் கார்த்திக் ராஜா, 32; ஓட்டினார்.விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த செண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 5:45 மணிக்கு பஸ் வந்தபோது, குறுக்கே நாய் சென்றதால் டிரைவர் பிரேக் போட்டார். இதனால், பின்னால் வந்த மாருதி எக்செல் கார் ஆம்னி பஸ் மீது மோதியது. அதனைத் தொடர்ந்து வந்த மற்றொரு தனியார் ஆம்னி பஸ், கார் பின் பக்கம் மோதியது.இந்த தொடர் விபத்தில் காரை ஓட்டி வந்த சென்னை பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் பிரவீன், 26; உட்பட காரில் வந்த 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தகவல் அறிந்து வந்த மயிலம் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். ஒரு மணிநேரம் போக்குவரத்து தடை ஏற்பட்ட நிலையில், வாகனங்களை சர்வீஸ் சாலை வழியாக அனுப்பி வைத்தனர்.கார் டிரைவர் பிரவீன் கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ