உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குடிக்க பணம் தர மறுத்தவரை தாக்கிய 4 பேர் கைது

குடிக்க பணம் தர மறுத்தவரை தாக்கிய 4 பேர் கைது

திண்டிவனம் : திண்டிவனத்தில் குடிக்க பணம் தர மறுத்த நபரை தாக்கி மிரட்டிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் அருகே முட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் மகன் அன்பரசன், 35; இவர், திண்டிவனம் டாஸ்மாக் கடையில் நேற்று மதுபானம் வாங்கி கொண்டு சென்றார். அப்போது, டாஸ்மாக் கடை அருகே நின்றிருந்த கிடங்கல் 2 பகுதியை சேர்ந்த மூங்கிலன் மகன் ஆகாஷ், 23; துரை மகன் திலீப், 22; உமாபதி மகன்கள் ராஜேஷ், 22; விக்னேஷ், 24; ஆகியோர் அன்பரசனிடம் குடிக்க பணம் கேட்டனர்.அன்பரசன் தர மறுத்ததால், நால்வரும் சேர்ந்து அவரை திட்டி, தாக்கி மொபைல் போனை பிடுங்கியதோடு, கொலை மிரட்டல் விடுத்தனர். அன்பரசன் அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் போலீசார் நால்வர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை