உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முன் விரோத மோதல் 4 பேர் கைது

முன் விரோத மோதல் 4 பேர் கைது

விழுப்புரம் : விழுப்புரத்தில் இரு தரப்பினர் மோதலில் 8 பேர் மீது வழக்கு பதிந்த போலீசார் 4 பேரை கைது செய்தனர். கீழ்ப்பெரும்பாக்கம், சண்முகபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி ஜெயா, 50; அதே பகுதியை சேர்ந்த இவரது தோழி அபிராமி, 35; கடந்த வாரம் ஸ்கூட்டரில் சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த ஆதிகேஸ்வரன், 22; என்பவர் அவரை வழி மறித்து தகராறில் ஈடுபட்டார். அப்போது, ஜெயா வந்து தட்டிகேட்டார். இந்த சம்பவத்தை வைத்து, ஆத்திரமடைந்த ஆதிகேஸ்வரன், கடந்த 24ம் தேதி பைக்கில் வந்த ஜெயாவையும், அவரது மகன் ரஞ்சித்தையும் வழிமறித்து தாக்கினார். மேலும், ஆதிகேஸ்வரன் குடும்பத்தினரும் சேர்ந்து தாக்கி, பைக்கையும் உடைத்து சேதப்படுத்தினர். இதில், ஜெயா, ரஞ்சித் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் ஆதிகேஸ்வரன், கோபாலகிருஷ்ணன், லிங்கேஷ்வரன், ரோகித் ஆகியோர் மீது வழக்கு பதிந்து, ஆதிகேஸ்வரன், லிங்கேஷ்வரனை கைது செய்தனர். இதே போல், கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், ஏழுமலை, 55; ஜெயா, 50; ரஞ்சித், 23; சுகுமார், 20; ஆகியோர் மீதும், வழக்குப்பதிந்து ஜெயா, ரஞ்சித்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை