உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஒரே மாதத்தில் 4 பேர் அடுத்தடுத்து பலி டவுன் போலீஸ் நிலையம் எதிரில் திக். திக்.. திண்டிவனம் மக்கள் பீதி

ஒரே மாதத்தில் 4 பேர் அடுத்தடுத்து பலி டவுன் போலீஸ் நிலையம் எதிரில் திக். திக்.. திண்டிவனம் மக்கள் பீதி

திண்டிவனம்: திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையம் எதிரிலுள்ள கூட்ரோடு சாலையில் ஒரே மாதத்தில் அடுத்தடுத்த நடந்த சாலை விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவத்தால், பொதுமக்கள் அச்சமடைதுள்ளனர்.திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையம் எதிரில் கூட்ரோடு உள்ளது. இங்கு விழுப்புரத் திலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள், சென்னையி லிருந்து விழுப்புரம் செல்லும் வாகனங்கள், புதுச்சேரியிலிருந்து திண்டிவனத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் திரும்பும் இடமாக உள்ளது.இதில் திண்டிவனம் - மயிலம் ரோடு தனியார் டி.வி. ஷோரூம் எதிரில் உள்ள வேகத்தடையில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் மூன்று பேர் விபத்தில் இறந்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை 4.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் வேகத்தடையில் ஏறி திரும்பும் போது, விழுப்புரத்திலிருந்து வேகமாக வந்த அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோபால், 23; என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.டவுன் போலீஸ் நிலையம் எதிரில் உள்ள கூட்ரோடு பகுதியில் அடிக்கடி நடந்து வரும் விபத்தை தடுக்கும் வகையில், நகர பொது மக்கள் சார்பில் திண்டிவனம் டவுன் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.அதில், கூட்ரோடு பகுதியில் விபத்தை தடுக்கும் வகையில் மூன்று சாலைகளையும் ஆய்வு செய்து, பேரி கார்டு மற்றும் தேவையான இடத்தில் வேகத்தடையும், கூட்ரோடு ஒட்டியுள்ள சாலையில் கூடுதலாக ஒரு ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை