உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டி.வி.நல்லுார் அருகே வாய்க்காலில் புதைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்து 4 பெண்கள் படுகாயம்

டி.வி.நல்லுார் அருகே வாய்க்காலில் புதைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்து 4 பெண்கள் படுகாயம்

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லூர் அருகே, நுாறு நாள் வேலை திட்ட பணியின் போது, வாய்க்காலில் புதைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு திடீரென வெடித்ததில் நான்கு பெண்கள் பலத்த காயமடைந்தனர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த டி.எடையார் கிராமத்தில், அரசு பள்ளி பின்புறமுள்ள விவசாய வாய்க்காலில் நேற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்ட வேலை நடந்தது.இதில், தொட்டிக்குடிசை கிராமத்தை சேர்ந்த பெண்கள் பலர் ஈடுபட்டனர். பகல் 1:00 மணியளவில், லட்சுமணன் மனைவி தேவகி, 53; என்பவர் மண் வெட்டியால் மண்ணை கொத்தியபோது, பலத்த சத்தத்துடன் நாட்டு வெடி குண்டு ஒன்று வெடித்து சிதறியது.அதில் தேவகி மற்றும் கோவிந்தன் மனைவி சுந்தரி, 45; கலியமூர்த்தி மனைவி தனம்,50; முருகன் மனைவி கலைவாணி, 40; ஆகியோருக்கு கால், கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவெண்ணெய் நல்லுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார், காயமடைந்த நான்கு பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம், சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வெடிகுண்டு சோதனை மற்றும் செயலிழப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் மதிவாணன் தலைமையிலான போலீசார், தடவியல் நுண்ணறிவு பிரிவு போலீசார் தடயங்களை சேகரித்தனர். சம்பவ இடத்தில், சணலால் சுற்றப்பட்டு வெடிக்காமல் இருந்த ஒரு வெடி பொருளை கைப்பற்றி, சோத னைக்காக எடுத்து சென்றனர்.சம்பவம் பற்றி போலீசார் கூறுகையில், ''காட்டு பன்றி தொல்லையை கட்டுப்படுத்துவற்காக நாட்டு வெடிகுண்டு புதைத்து வைத்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை