மேலும் செய்திகள்
பொது இடத்தில் ரகளை கடலுார் வாலிபர்கள் கைது
06-Oct-2025
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே கஞ்சா போதையில் பள்ளி மாணவியிடம் ரகளையில் ஈடுபட்டதுடன், தட்டிக்கேட்டவர்களை கத்தியால் வெட்டிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், வீடூர் அணையில் உள்ள பூங்காவில் நேற்று பகல், 1:00 மணியளவில் பள்ளி மாணவர் -- மாணவி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு கஞ்சா போதையில் வந்த ஐந்து வாலிபர்கள் மாணவியை கிண்டல் செய்தனர். அதை உடனிருந்த மாணவர் தட்டிக்கேட்ட போது வாலிபர்கள் மாணவரை தாக்கினர். அதிர்ச்சியடைந்த மாணவர் கூச்சலிட்டு அருகிலிருந்தவர்களிடம் உதவி கேட்டார். வீடூர் அணையில் பணிபுரியும் ஊழியர் அங்கிணிகுப்பத்தை சேர்ந்த நாராயணன், 54, மாணவரை தாக்கிய வாலிபர்களை தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த வாலிபர்கள், நாராயணனை கத்தியால் பின் மண்டையில் வெட்டினர். அதன் பிறகு அவ்வழியே சென்ற ஆத்திக்குப்பத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி, 67, மேல்காரணையை சேர்ந்த எலக்ட்ரீஷியன் ஞானவேல், 47, பூண்டு வியாபாரி பனையபுரத்தை சேர்ந்த வேலாயுதம், 52, ஆகியோரை வழிமறித்து பணம் கேட்டு கத்தியால் வெட்டினர். தொடர்ந்து, அணைக்கட்டு பகுதியில் இருந்த டிபன் கடை, ஐஸ்கிரீம் கடை ஆகியவற்றை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். பின்னர் பொதுமக்கள் ஒன்று கூடவே அங்கிருந்து தப்பியோடினர். விக்கிரவாண்டி போலீசார் அப்பகுதி சவுக்கு தோப்பில் பதுங்கியிருந்தவர்களை கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிந்தனர். விசாரணையில், அவர்கள் வீடூரை சேர்ந்த ராஜேஷ், 27, சிவனேசன், 23, ரித்தீஷ், 25, கெடிலம், செம்மணந்தலை சேர்ந்த விஜய், 22, சென்னை, செங்குன்றத்தை சேர்ந்த கார்த்திக், 27, என, தெரிந்தது.
06-Oct-2025