உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறுமி பாலியல் பலாத்காரம் 5 சிறுவர், வாலிபர் கைது

சிறுமி பாலியல் பலாத்காரம் 5 சிறுவர், வாலிபர் கைது

செஞ்சி,:செஞ்சி அருகே, மாயமான ஒன்பதாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஐந்து சிறுவர்கள் உட்பட ஆறு பேரை போலீசார் நேற்று போக்சோ வழக்கில் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுடைய ஒன்பதாம் வகுப்பு மாணவி, ஏப்., 26ல், தன் தாத்தாவுடன் வங்கிக்கு சென்றபோது மாயமானார். அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து, மாணவியை தேடி வந்தனர். நேற்று மாணவியை, 19 வயது இளைஞர் வீட்டில் இருந்து போலீசார் மீட்டனர். மாணவியிடம் நடத்திய விசாரணையில், 19 வயது இளைஞர் உட்பட ஆறு பேர், மாணவியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அவரை பலாத்காரம் செய்த 19 வயது இளைஞர் மற்றும் 18 வயதிற்கு குறைவான ஐந்து சிறுவர்களையும் செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை