மேலும் செய்திகள்
மாநில அளவில் சிலம்பம் பயிற்சி
10-Jul-2025
விழுப்புரம் : விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் 6 பேர் சிலம்பம் போட்டிகளில் வென்று சாதித்து வருகின்றனர்.விழுப்புரம் முத்தையால் நகரை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரின் சகோதரர்கள் கணசேன், பாலசுப்ரமணியன். இவர்களின் தாய்மாமன் முருகன். இவர்களின் பிள்ளைகள் தருண், மித்ரா, கிஷோர், அரிஸ்வர்ஜூன், சுவஸ்திகா, சர்மிஸ்ட்ரா. இவர்கள் 6 பேரும், விழுப்புரம் இ.எஸ்., லார்ட்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் பயில்கின்றனர்.இந்த ஆறு பேரும், விழுப்புரம் மாவட்ட டி.என்.ஆர்.எஸ்., அன்பு சிலம்பம் மற்றும் கராத்தே அறக்கட்டளை பயிற்சியாளர் அன்பரசியிடம், கடந்த 6 ஆண்டுகளாக சிலம்பம் பயிற்சி பெறுகின்றனர்.இவர்கள் சிலம்பத்தில் உள்ள ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, சுருள்வால், வேல் கம்பு, அலங்கார சிலம்பம், போர் சிலம்பம், தீ சிலம்பம் ஆகிய அனைத்தும் கற்று கொண்டுள்ளனர்.மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் வென்று பல பரிசுகள் பெற்று சாதித்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள் 6 பேரும், பெங்களூரில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் முதலிடம் பிடித்து வென்றுள்ளனர்.மேலும், இவர்கள் நோபல் உலக சாதனை புத்தகத்தில் ஒரு மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுழற்சி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.பள்ளிக்கல்வி துறை நடத்திய சிலம்பம் போட்டியிலும், முதல்வர் கோப்பை சிலம்பம் போட்டியிலும் பங்கேற்று வென்றுள்ளனர். இந்த மாணவர்கள், சென்னையில் நடந்த மாநில சிலம்பம் போட்டியில் முதல் பரிசை பெற்றுள்ளனர். தொடர்ந்து சிலம்பம் சுற்றுவதால் தற்காப்பு கலை கற்று கொண்ட உள்ளுணர்வு ஏற்படுவதோடு, உடற்பயிற்சி செய்ததாக உள்ளதாகவும், படிப்பதற்கு முன் சிலம்பம் சுற்றுவதால் சுறுசுறுப்பாக உள்ளதாகவும், பெற்றோர், பயிற்சியாளர் ஊக்குவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
10-Jul-2025