உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாவட்டத்தில் 61 ஏரிகள் முழுமையாக... நிரம்பியது: தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

மாவட்டத்தில் 61 ஏரிகள் முழுமையாக... நிரம்பியது: தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால், 61 ஏரிகள் முழுமையாக நிரம்பின. மேலும் 93 ஏரிகளில் 51 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் நிரம்பியது. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் 14 ஆயிரத்து 141 ஏரிகள் உள்ளன. அதிகபட்சமாக 100 சதவீதம் 1,522 ஏரிகளும், 76 முதல் 99 சதவீதம் வரை 1,842 ஏரிகளும், 51 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை 2,253 ஏரிகளும், 26 முதல் 50 சதவீதம் வரை 3,370 ஏரிகளும், ஒரு சதவீதம் முதல் 25 வரை 4,534 ஏரிகளும் நிரம்பின. இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கன மழையால், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 505 ஏரிகளில், 61 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளது. மேலும், 76 முதல் 99 சதவீதம் வரை42 ஏரிகளும், 51 முதல் 75 சதவீதம் வரை 93 ஏரிகளும், 26 முதல் 50 சதவீதம் வரை 186 ஏரிகளும், 25 சதவீதத்திற்கும் குறைவாக 123 ஏரிகளும் நிரம்பியுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 115 ஏரிகளில், 16 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளது. மேலும், 76 முதல் 99 சதவீதம் வரை 8 ஏரிகளும், 51 முதல் 75 சதவீதம் வரை 30 ஏரிகளும், 26 முதல் 50 சதவீதம் வரை 46 ஏரிகளும், 25 சதவீதத்திற்கும் குறைவாக 15 ஏரிகளும் நீர் நிரம்பியுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 ஏரிகளில் ஒரு ஏரியில் 50 சதவீதத்திற்கு மேல், 3 ஏரிகளில் 25 சதவீதத்திற்கு குறைவாகவும் நீர் நிரம்பியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், கனமழையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 04146-223265, 9498100485 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கனமழை எச்சரிக்கை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை