மேலும் செய்திகள்
தந்தை மாயம் மகள் புகார்
26-Mar-2025
விழுப்புரம் : கண்டமங்கலம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த கடலுார் மாவட்டத்தை சேர்ந்த 7 பேரை ஆர்.டி.ஓ., தலைமையிலான அதிகாரிகள் மீட்டனர்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் கன்னியப்பன், 45; இவர் தனது மனைவி லட்சுமி மற்றும் குடும்பத்தினர் 7 பேருடன், விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த நவமால்மருதுாரில் ஒரு செங்கல் சூளையில் தங்கி கடந்த சில மாதங்களாக வேலை செய்து வந்தனர்.இந்நிலையில் கன்னியப்பன், விழுப்புரம் ஆர்.டி.ஓ.,வை தொடர்பு கொண்டு, தங்களை கொத்தடிமையாக வைத்திருப்பதாக கூறினர். இதையடுத்து, ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில்தார் கனிமொழி, தொழிலாளர் நல உதவி ஆணையர் மீனாட்சி உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று, கன்னியப்பன் மற்றும் செங்கல் சூளை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின், கன்னியப்பன் குடும்பத்தினரை மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
26-Mar-2025