உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காட்டுப்பன்றியின் மீது ஆட்டோ மோதி 7 பேர் காயம்

காட்டுப்பன்றியின் மீது ஆட்டோ மோதி 7 பேர் காயம்

திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே சாலையை கடக்க முயன்ற காட்டு பன்றி மீது ஆட்டோ மோதி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் பாண்டியன், 30; ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் பையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அய்யனார், 45; துரை மகன் வீரன், 31; நெப்போலியன் மனைவி குபிதா, 27; இளையராஜா மனைவி நவரத்தினம், 32; துரைராஜ் மகன் இளையராஜா, 50; துரைராஜ் மகன் பன்னீர்செல்வம், 32; ஆகியோரை ஏற்றிக்கொண்டு திருவெண்ணெய்நல்லுாரில் இருந்து தொட்டி குடிசை மலட்டாறு வழியாக பையூர் சென்றார். அப்போது மலட்டாறு பகுதியில் திடீரென சாலையின் குறுக்கே வந்த காட்டு பன்றி மீது ஆட்டோ மோதி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த டிரைவர் பாண்டியன் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த திருவெண்ணெய்நல்லுார் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் காட்டுப்பன்றி சம்பவ இடத்திலே உயிரிழந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !