விழுப்புரத்தில் பூட்டியிருந்த வீட்டில் 8 சவரன் நகை துணிகர திருட்டு
விழுப்புரம் ; விழுப்புரத்தில் பூட்டியிருந்த தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.விழுப்புரம் அருகே சலாமேடு அபிதா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் மகன் கலைவானன்,45; இவர், மதுராந்தகத்தில் உள்ள தனியார் மருந்துகம் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். விடுமுறைக்கு வந்த கலைவாணன், கடந்த தீபாவளியன்று தனது வீட்டை பூட்டிகொண்டு, குடும்பத்துடன் முட்டத்தூரில் உள்ள சொந்தவீட்டிற்கு சென்றிருந்தார்.மீண்டும் நேற்று சாலாமேடு வீட்டிற்கு வந்து பார்த்தபோது பின் பக்க கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.உள்ளே சென்று பார்த்தபோது, மர பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 8 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி பொருள்கள் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.இதுகுறித்து, அவர் அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர். திருட்டு சம்பவம் குறித்து, தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.