உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓய்வுபெற்ற கண்டக்டர் வீட்டில் 8 சவரன் நகைகள் கொள்ளை

ஓய்வுபெற்ற கண்டக்டர் வீட்டில் 8 சவரன் நகைகள் கொள்ளை

விழுப்புரம் : விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் 8 சவரன் நகைகள் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 64; ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவர், நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டிக்கொண்டு, தனது மனைவியுடன் மயிலம் கோவிலுக்குச் சென்றார்.அவரது மகன், இரவு 7:00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு பைக்கில் விழுப்புரம் டவுனுக்கு வந்துள்ளார்.ஒரு மணி நேரத்தில் அவர் மீண்டும் வீட்டிற்குச் சென்றபோது வீட்டின் முன்பக்க மின் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தது. கிரில் கேட்டுகள் திறந்து கிடந்த நிலையில் வீட்டினுள் ஆட்கள் இருக்கும் சத்தம் கேட்டுள்ளது. சந்தேகமடைந்து மாடி வழியாக ஏறிச்சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் 3 பேர் வீட்டில் முன் வாசல் வழியாக வெளியேறி ஒரு பைக்கில் தப்பிச் சென்றதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்து 8 சவரன் நகை, 1,500 ரூபாய் மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் கொள்ளை போனது தெரியவந்தது.தகவலறிந்த விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வவிநாயகம் மற்றும் கைரேகை நிபுணர், மோப்பநாய் ராக்கியுடன் வந்து தடயங்களை சேகரித்தனர்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை