உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 80 கிலோ கஞ்சா பறிமுதல்; கடத்திய ஏழு பேர் கைது

80 கிலோ கஞ்சா பறிமுதல்; கடத்திய ஏழு பேர் கைது

திருவெண்ணெய்நல்லுார் ; சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு ஆட்டோவில் கஞ்சா கடத்திய தாய், மகன் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் போலீசார், ஏனாதிமங்கலம் எல்லீஸ் அணைக்கட்டு பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில், 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. ஆட்டோவில் இருந்த செங்கல்பட்டு மாவட்டம், மேல்கால்வாய் பகுதி கணேசன்,40, அவரது தாய் தனம், 60, ஆகியோரிடம் விசாரித்தனர்.சென்னையில் இருந்து ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்து, விழுப்புரத்தில் பல்வேறு இடங்களில் உள்ள வியாபாரிகள் வாயிலாக விற்பனை செய்வது தெரியவந்தது. இருவரும் அளித்த தகவலில், கஞ்சா விற்பனை மற்றும் சப்ளையில் ஈடுபட்ட மேலும் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். ஏழு பேர் மீதும் வழக்கு பதிந்த திருவெண்ணெய்நல்லுார் போலீசார், 80 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ