வாசகர்கள் கருத்துகள் ( 1 )
டீ, பஜ்ஜி, வடை, போண்டா கடைகளுக்கு குறைந்த விலையில் பேப்பர் கிடைக்கும்.
மேலும் செய்திகள்
பணிச்சுமை உளைச்சலில் வருவாய்த் துறையினர்
14-Oct-2025
விழுப்புரம்: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் மூலம் மாவட்டத்தில், ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 993 மனுக்கள் வர பெற்றது. அவற்றில் 84 ஆயிரத்து 537 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 34 ஆயிரத்து 500 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மக்களின் வசிப்பிடத்திற்கே நேரில் சென்று குறைகளை நிறைவேற்றிடும் வகையில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் கடந்த ஜூலை 15ம் தேதி துவங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் ஜூலை 15ம் தேதி முதல் அக்டோபர் 17ம் தேதி வரை, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின்கீழ் நகர்ப்புற பகுதிகளில் 55 முகாம்கள், ஊராட்சிப் பகுதிகளில் 236 முகாம்கள் உட்பட மொத்தம் 291 இடங்களில் முகாம்கள் நடந்தது. இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசு துறைகளைச் சேர்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நடைபெற்ற 291 முகாமில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 993 மனுக்கள் வர பெற்றது. அவற்றில் 84 ஆயிரத்து 537 மனுக்கள் ஏற்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 34 ஆயிரத்து 500 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், 20 ஆயிரத்து 228 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. முகாமில் விண்ணப்பம் வழங்கிய, மயிலம் ஒன்றியம், நாடேரிகுப்பத்தைச் சேர்ந்த அம்சவள்ளி கூறுகையில், 'நாடேரிகுப்பத்தில் வசித்து வருகிறேன். தினசரி கூலி வேலைக்கு சென்று குறைவான சம்பளத்தில் அன்றாட வாழ்க்கையினை நடத்தி வருகிறேன். எங்கள் குடும்பம் நடத்துவதற்கான தினசரி வருமானம் போதுமானதாக இல்லை. எனவே, மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில், ரெட்டணை கிராமத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமில் கலந்து கொண்டு மனு அளித்தேன். மனு மீது உடனடியாக விசாரனை மேற்கொண்டு உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்க ப்பட்டது. உரிமைத் தொகை கிடைக்கப்பெற்றால் எங்கள் குடும்பம் மாதா ந்திர செலவிற்கு பயனுள்ளதாக இருக்கும்' என்றார். அவலுார்பேட்டையைச் சேர்ந்த ஷாயின்பேகம் கூ றுகையில், 'எங்களுடைய குடும்பம் ஏழ்மையான குடும்பம் ஆகும். எங்கள் ஊரிலிருந்து விழுப்புரம் செல்வதற்கு 60 கி.மீ., துாரம் உள்ளதால், காப்பீடு திட்டத்தில் மனு கொடுப்பதற்கு, தயங்கி வந்தேன். தற்போது அவலுார்பேட்டையில் நடைபெற்ற முகாமில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வேண்டி விண்ணப்பித்தேன். கோரிக்கை மனுவை பெற்ற அலுவலர் உடனடியாக பரிசீலனை செய்து காப்பீடு அட்டை வழங்கப்படும் என்றனர். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது' என்றார்.
டீ, பஜ்ஜி, வடை, போண்டா கடைகளுக்கு குறைந்த விலையில் பேப்பர் கிடைக்கும்.
14-Oct-2025