உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வி.சி., மறியல் போராட்டம் விழுப்புரத்தில் 95 பேர் கைது

வி.சி., மறியல் போராட்டம் விழுப்புரத்தில் 95 பேர் கைது

விழுப்புரம் : விழுப்புரத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட வி.சி., கட்சியிவினர் 95 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரத்தில் வி.சி.க., சார்பில், அம்பேத்கரை அவமதித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, நேற்று ரயில் மறியல் போராட்டம் நடந்தது.ரயில் நிலையத்தில் காலை 10.15 மணிக்கு, விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பெரியார் தலைமையில், நகர செயலாளர்கள் இரணி யன், வழக்கறிஞர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் ஆசைத்தம்பி, சங்கத் தமிழன், அறிவன், முகிலன், முருகவேல், ஆதிதமிழன், கலையரசன், கண்ணன் ஆகியோர் முன்னிலையில், ஏராளமான நிர்வாகிகள், கட்சியினர் திரண்டிருந்தனர்.அப்போது, 10.30 மணிக்கு, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த சோழன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து, அமித்ஷாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் டவுன் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் ரயில்வே போலீசார், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனையடுத்து, 15 நிமி டம் தாமதமாக சோழன் ரயில் 10.45 மணிக்கு புறப்பட்டு சென்றது. ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 95 பேரை போலீசார் கைது செய்தபோது, அமித்ஷா படத்துடன் இருந்த டிஜிட்டல் பேனரை, சிலர் தீ வைக்க முயன்றதை, அங்கிருந்த போலீசார் தடுத்து பறிமுதல் செய்ததால், தள்ளு, முள்ளு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ