உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறுமியை கடத்தியவர் மீது வழக்கு

சிறுமியை கடத்தியவர் மீது வழக்கு

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரை கடந்த 30ம் தேதி இரவு 7:45 மணி முதல் வீட்டிலிருந்து காணவில்லை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் விசாரித்தபோது வீரணாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் மாரியப்பன், 21; என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் மாரியப்பன் மீது வழக்கு பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை