உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மைத்துனரை தாக்கியவர் மீது வழக்கு பதிவு

மைத்துனரை தாக்கியவர் மீது வழக்கு பதிவு

வானுார்: வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம், காந்தி நகர், காமராஜர் தெருவைச் சேர்ந் தவர் பெரியசாமி, 50; இவர், அதே பகுதியில் மளிகைக்கடை வைத்துள்ளார். இவரது மைத்துனரான திண்டிவனம் அய்யந்தோப்பு பகுதியை சேர்ந்த செல்லத்துரை, நேற்று முன்தினம் பெரியசாமி வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போது கடையில் இருந்த பெரியசாமியிடம், தான் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த பெரியசாமி, தடியால் செல்லத்துரையை தாக்கினார். காயமடைந்த செல்லதுரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.செல்லத்துரை கொடுத்த புகாரின் பேரில், பெரியசாமி மீது ஆரோவில் போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை