உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாலிபரை தாக்கிய இருவர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய இருவர் மீது வழக்கு

விழுப்புரம்: வளவனுார் அருகே வாலிபரைத் தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.வளவனுார் அடுத்த பனங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் அன்புராஜ், 31; இவர், மீது கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.தற்போது சிறையிலிருந்து வெளியே வந்த அன்புராஜ், கடந்த 18ம் தேதி, பனங்குப்பம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டின் அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த அருள் உறவினரான புதுச்சேரியைச் சேர்ந்த பாலமுருகன், இவரது நண்பர் பண்ருட்டி நவீன்ராஜ் ஆகியோர் முன்விரோதம் காரணமாக அன்புராஜை திட்டி, தாக்கி மிரட்டல் விடுத்தனர்.புகாரின் பேரில், வளவனுார் போலீசார் பாலமுருகன், நவீன்ராஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை