மேலும் செய்திகள்
வீட்டு கதவு உடைத்து நகை, பணம் திருட்டு
04-Sep-2024
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே கோவில் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விக்கிரவாண்டி அடுத்த சின்னதச்சூர் பொன்னியம்மன் கோவில் குருக்கள் சங்கர் நேற்று காலை கோவிலை திறக்கச் சென்றார். அப்போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைத் பார்த்து அதிர்ச்சியடைந்து நிர்வாகி நாகராஜிக்கு தகவல் தெரிவித்தார்.அவர் வந்து பார்த்தபோது, உள்ளே பீரோவில் இருந்த சிறிய அளவிலான தங்கவேல், அம்மனின் தங்க பொட்டு, காசு என 25 கிராம் தங்கம், 2 வெள்ளி கொலுசு உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.தகவலறிந்து வந்த பெரியதச்சூர் போலீசார், கைரேகை பிரிவினர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.மேலும், நகராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
04-Sep-2024