மேலும் செய்திகள்
பைக் மோதி இளநீர் வியாபாரி பலி
21-Dec-2024
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.விழுப்புரம் அடுத்த கெடார் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன்,20: இவரது நண்பர் வீரமூரை சேர்ந்த குகன் ,20: கல்லுாரி நண்பர்கள்.இருவரும் பைக்கில் கடந்த 1ம் தேதி புத்தாண்டையொட்டி, மயிலம் முருகர் கோவிலுக்கு சென்றனர். லிங்கேஸ்வரன் பைக்கை ஓ்ட்டியுள்ளார்.இவர்கள் வந்த பைக் விக்கிரவாண்டி அடுத்த சித்தணி தனியார் ஓட்டல் அருகே செல்லும் போது அரசு பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே லிங்கேஸ்வரன் இறந்தார். விபத்தில் பலத்த காயமடைந்த குகன், மேல் சிகிச்சைக்காக சென்னையில் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி குகன் இறந்தார்.நண்பர்கள் இருவரும் அடுத்தடுத்து விபத்தில் இறந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
21-Dec-2024