லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அருகே சாலையில் நின்றிருந்த லாரியில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.அவலுார்பேட்டை அடுத்த மேல்செவலாம்பாடி கிராமத்தை சேர்ந்த சாமிகண்ணு மகன் திருமலை, 30; விவசாயி. நேற்று முன்தினம் இரவு தனது பல்சர் பைக்கில் ஆவலுார்பேட்டைக்கு சென்றார். அப்போது கப்ளாம்பாடி கிராமத்தில் சாலையிலே டி.என். 29.ஏ.ஒய். 7588 எண்ணுடைய லாரி நின்றிருந்தது. திருமலை ஓட்டிச் சென்ற பைக், லாரியின் பின்பகுதியில் மோதியது. படுகாயம் அடைந்த திருமலையை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.