உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயில் படியில் பயணித்த வாலிபர் கை துண்டானது

ரயில் படியில் பயணித்த வாலிபர் கை துண்டானது

விழுப்புரம்: விழுப்புரத்தில் ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த வாலிபரின் கை துண்டானது. மயிலாடுதுறையை சேர்ந்தவர் புவனேஷ்வரன் மகன் தினேஷ், 21; இவர், சென்னையிலிருந்து நேற்று இரவு ரயிலில் ஊருக்கு புறப்பட்டார். திருச்செந்துார் விரைவு ரயிலில், முன்பதிவில்லாத பெட்டியில் வந்தவர், கூட்ட நெரிசல் காரணமாக ரயில் படிக்கட்டில் அமர்ந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த ரயில், நேற்று இரவு 7:45 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் 6வது பிளாட்பாரத்திற்கு வந்து மெதுவாக நின்றுள்ளது. அப்போது, படிக்கட்டில் அமர்ந்து வந்த தினேஷின் கால் பிளாட்பாரத்தில் உரசியதால், ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே சந்தில் விழுந்துள்ளார். அதில், அவரது இடது கை முட்டி பகுதியில் சிக்கி துண்டானது. உடனே அங்கிருந்த விழுப்புரம் ரயில்வே போலீசார், மயங்கி விழுந்த தினேஷை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி