பொன்னியம்மன் கோவிலில் ஆடி பெருவிழா
செஞ்சி : பொன்னியம்மன் கோவிலில் ஆடி பெரு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். செஞ்சியை அடுத்த கொங்கரப்பட்டு பொன்னியம்மன் மாரியம்மன் கோவிலில் ஆடி பெருவிழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு பொன்னியம்மன் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 10:00 மணிக்கு பூ பல்லக்கில் வான வேடிக்கை, சிலம்பாட்டம், வாத்தியங்கள் முழங்க சரஸ்வதி தேவி அலங்காரத்தில் சாமி வீதி உலா நடந்தது. காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த கிராம மக்கள் சார்பில் மாலை நேர சிற்றுண்டிக்கான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.