ஆடி வெள்ளி வழிபாடு
திண்டிவனம் : ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.திண்டிவனத்தில் அங்காளம்மன் கோவில், எம்.ஆர்.எஸ்.ரயில்வே கேட் முத்துமாரியம்மன் கோவில், நாகலாபுரம் பாப்பாத்தி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில்நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் தரிசனத்திற்காக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.முத்துமாரியம்மன் கோவிலில், ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, கூழ் ஊற்றி பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.