உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விசா காலம் முடிந்து ஆரோவில்லில் வசித்த இரு அமெரிக்கர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை

விசா காலம் முடிந்து ஆரோவில்லில் வசித்த இரு அமெரிக்கர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை

வானுார்: விசா காலம் முடிந்து, ஆரோவில் பகுதியில் தங்கியிருந்த அமெரிக்க நாட்டை சேர்ந்த இருவரை போலீசார் அந்நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் குதிரை பண்ணை அருகில், இடையஞ்சாவடி கிராமத்தை சேர்ந்த ஜெயவேல் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் அமெரிக்காவை சேர்ந்த டக்ளஸ் பால் மேக்லனி, 51; டோனி லூ டிக்கி, 64; ஆகிய இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு தங்கினர். அப்போது, வீட்டின் உரிமயைாளர் ஜெயவேலுவிடம், டோனி லுா டிக்கி, தான் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றபிறகு வங்கி பணியில் ஆன்லைன் மூலம் வேலை செய்து வருவதாக கூறியுள்ளார். ஏற்கனவே இருவரும் புதுச்சேரி குருசுகுப்பத்தில் கடந்த, 2017ம் ஆண்டில் இருந்து தங்கி இருந்தனர். அப்போதே இருவரின் விசாவும் முடிந்துள்ளது. அதனால் அவர்களை புதுச்சேரி இந்திய குடியுரிமை துறை போலீசார் தேடி வந்தனர். இருவரும் ஆரோவில் பகுதியில் வசிப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. புதுச்சேரி இந்திய குடியுரிமை துறை டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமை யில் போலீசார் மற்றும் ஆரோவில் போலீசார், அவர்கள் குடியிருந்த வீட்டை சோதனை செய்து இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களின் விசா காலம் முடிந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து இருவரையும் அந்நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி இருவரும் சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

என்றும் இந்தியன்
செப் 15, 2025 16:48

8 வருடங்கள் கழித்து முழிப்பு வந்ததா???


shyamnats
செப் 15, 2025 08:10

எட்டு வருடங்கள் ஏன்? ட்ரம்பின் இந்திய விரோத நடவடிக்கைக்கு பின் தான் சுதாரித்தார்களா? கிழக்கு மற்றும் தெற்கு மாநிலங்களிலும் இத்தகைய களையெடுப்பு நடவடிக்கை தேவை. மம்தா போன்றோரின் ஆசியுடன் ஆதார் வழங்கப் பட்டிருந்தாலும் கடுமையான முறையில் சோதனை செய்யப்பட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை